அ.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்புடன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் தீவிரமாக தேர்தல் களப்பணியாற்ற தொடங்கி விட்டனர். இந்த இரண்டு கட்சிகள் சார்பிலும் தற்போது பூத்கமிட்டி அளவில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி ஆகியோர் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்ட மணிகண்டம், பாகனூர், மேக்குடி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி, மகளிர் குழு மற்றும் இளைஞர் பாசறை குழுக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்கருப்பன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழக இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், தொழிற்சங்கம் ஜெகதீசன், ஸ்ரீரங்கம் நடேசன், ஜெயம் ஸ்ரீதர், சமயபுரம் சுந்தரமூர்த்தி, நல்லுசாமி, சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ரஜினிகாந்த், தமிழழகன், சேகர்மணி, பழனிசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu