திருச்சி துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருச்சி துவாக்குடிமலை  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
X
திருச்சி துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி, துவாக்குடிமலை, அரசினர்பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம், பகுதிநேரம் மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி, துவாக்குடிமலை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு முழுநேரம், பகுதிநேரம் சேர 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ ,மாணவியர் மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டய படிப்பிற்கு 12-ஆம் வகுப்பு ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரிடமிருந்து சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சுகர் டெக்னாலஜி துறைகளில் முதல் சுழற்சியிலும், சிவில் (தமிழ்வழி), மெக்கானிக்கல் (தமிழ்வழி), மெக்கானிக்கல் (சிஏடி), எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறைகளில் இரண்டாம் சுழற்சியிலும் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.

இதுபோல் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பாடப் பிரிவுகளில் பகுதிநேர சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.

கல்லூரியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து சேருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

பதிவுகட்டணம் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு பதிவு கட்டணம் இல்லை. மற்ற வகுப்பினருக்கு ரூ.150- விண்ணப்ப கட்டணம் உண்டு.

இருபாலருக்கும் விடுதி வசதி உண்டு. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள். 7402615011, 7010191700.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!