சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் வலியுறுத்தல்

சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் வலியுறுத்தல்
X

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் வலியுறுத்தி பேசினார்.

நடிகர் திலகம் சிவாஜி சிலையை அக்டோபர் முதல் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர்.திருக்குறள் வாசிப்பிற்கு பின்னர் கூட்ட நடவடிக்கைகள் தொடங்கின.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

இன்றைய மாமன்ற கூட்டத்தில், பாலக்கரையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையினை, வருகின்ற அக்டோபர் 1 ம் தேதி அன்று திறப்புவிழா காண வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ௩௯வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல் ரெக்ஸ் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

மேலும் பாதாள சாக்கடை பணி முடியும் தருவாயில் உள்ளதால், இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும் சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் உறுப்பினர்கள் பேசினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!