திருச்சியில் நடைபயிற்சி சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு

திருச்சியில் நடைபயிற்சி  சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு
X
நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதியதில் பரிதாப பலி

திருச்சி பாலக்கரை எடத்தெரு மெயின் ரோட்டை சேர்ந்தவர் நடேசபிள்ளை (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாக்கிங் சென்ற போது பழைய பால்பண்ணை அருகே ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நடேச பிள்ளையை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவரது மகன் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு சப் இன்ஸ்பெக்டர் அன்னம்மாள்ரெனி வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தை சேர்ந்த ஞானசுந்தர் (வயது 55) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது காரை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!