திருச்சி மாநகராட்சியில் தியாகிகள் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சியில் தியாகிகள்  தினத்தையொட்டி  உறுதி மொழி ஏற்பு
X

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் தியாகிகள் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் தியாகிகள் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு

அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் மகாத்மா காந்தியடிகள். அதனால் தான் அவர் தேசதந்தை என போற்றப்படுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந்தேதி மகாத்மா காந்தியடிகள் கோட்சே என்ற கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நினைவு நாள் நாடு முழுவதும் தியாகிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று காலை 11.00 மணிக்கு மேயர் மு.அன்பழகன் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக " மௌன அஞ்சலி " அனுசரிப்பும் , அதனைத் தொடர்ந்து " தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி "எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் நாராயணன்,மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.மேயர் உறுதி மொழி படிக்க அதனை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் திரும் படித்தனர்.

Tags

Next Story