/* */

மாநகராட்சி மண்டலம் 4 -ல் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி ஏற்பு

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 -ல் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மாநகராட்சி மண்டலம் 4 -ல் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி ஏற்பு
X

திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டல குழு அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டல குழு அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அரசு அலுவலகங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டல குழு அலுவலகத்தில் இன்று காலை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல குழு தலைவர் துர்கா தேவி தலைமை தாங்கினார். மண்டல உதவி ஆணையர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

உதவி ஆணையர் சண்முகம் உறுதிமொழியை படித்தார். அதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாதாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணைய தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரைமுறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும் எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் கொலை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சிறிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் நான் உளமாற உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த உறுதிமொழியினை மண்டலம் நான்கில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரும்ப படித்து உறுதி ஏற்றுக் கொண்டனர்.

Updated On: 9 Feb 2023 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்