திருச்சியில் ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில்  ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரதிய வித்யார்தி பரிசத் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது

பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை கண்டித்து ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டத்தில் சாப்டர் தனியார் பள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான சாப்டர் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரதிய வித்யார்தி பரிசத் சார்பாக சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏபிவிபி தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா மற்றும் மாநகர செயலாளர் ஹேம சூர்யா, மாநகர இணை செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் ஏபிவிபி தென் தமிழக மாநில இணை சமூக வலைதள பொறுப்பாளர் பிரவீன், பல்கலைக் கழக பொறுப்பாளர் விக்னேஸ்வரன், மாநகர பொறுப்பாளர்கள், மாணவத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture