திருச்சியில் ஏ.பி.வி.பி. அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஏ.பி.வி.பி. அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் ஏ.பி.வி.பி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சியில் ஏ.பி.வி.பி.அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் திருச்சி மாவட்ட அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் அருண் தலைமை தாங்கினார்.

தேசிய செயலாளர் முத்து ராமலிங்கம், தென் தமிழக விஷ்வ ,இந்து பரிஷத் மாநில தலைவர் குலைகாதர், தமிழக, கேரளா பொறுப்பாளர் நாகரஜன்,பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் பெருமாள்சாமி,இந்து முன்னணி கோட்ட தலைவர் போஜராஜன்,பா.ஜ.க. பாலக்கரை மண்டல தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு அலுவலகம் தாக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!