பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு

X
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்.
By - R.Ponsamy,Sub-Editor |17 March 2022 10:51 AM IST
பள்ளி கல்வி துறை அமைச்சர் சொந்த தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குணசேகரன், மாநில பொருளாளர் நீலகண்டன் ஆகியோர் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியான திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா இலவச சீருடை 4 செட் வழங்குவதற்கு பதிலாக 2 செட் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான வட்டார கல்வி அலுவலர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu