அப்துல் கலாம் 90-வது பிறந்தநாள்: திருச்சி ஜோசப் கல்லூரியில் கொண்டாடப்பட்டது
திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90-ஆவது பிறந்தநாள் விழா திருச்சி தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இயற்பியல் துறைத்தலைவர் டாக்டர் ரவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமை தாங்கினார். செயலர் டாக்டர் பீட்டர் சிறப்புரையாற்றினார். இணை முதல்வர் டாக்டர் அலெக்ஸ் ரமணி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனர் டாக்டர் மினி சாஜி தாமஸ், தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற டாக்டர் லக்ஷ்மணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் அப்துல் கலாம் வழங்கிய உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர். டாக்டர் மினி சாஜி தாமஸ் பேசுகையில், அப்துல் கலாம் நேர்மையாளராகவும், எளிய உள்ளம் படைத்தவராகவும், சிறந்த தலைவராகவும் விளங்கினார். மாணவர்கள் பிரிவினைகளை மறந்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்கள் விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களாக மாற வேண்டும். உலகின் எப்பகுதிக்கு செல்வதற்கும் துணிச்சல் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
டாக்டர் லக்ஷ்மணன் தனது பேசுகையில், டாக்டர் கலாம் அவர்கள் தனக்கு பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார். அவர் தனது அக்னி சிறகுகள் நூலில் தான் பயின்ற திருச்சி ஜோசப் கல்லூரியையும், தனக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களையும் நினைவு கூர்ந்ததை படித்திருப்பீர்கள் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து அப்துல் கலாம் நினைவு விரிவுரை இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர் மாகி டயனா தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் டாம்னிக் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu