திருச்சி: வீட்டில் ஒட்டடை அடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் பலி

திருச்சி: வீட்டில் ஒட்டடை அடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் பலி
X
கோட்டை காவல் நிலையம்.
திருச்சியில் வீட்டில் ஒட்டடை அடித்த போது மூக்கில் தூசி ஏறியதில் மூச்சு திணறி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி கோட்டை நடு பெரியகம்மாள தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவரது மனைவி சுந்தராட்சி (41). சுந்தராட்சி தனது வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தூசி இவரது மூக்கில் ஏறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கணவர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு