திருச்சி காஜாமலை பகுதியில் பூகம்பம் வந்தது போல் சாலையில் திடீர் பள்ளம்
திருச்சி காஜாமலை சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பினால் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி காஜாமலையில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடது புறம் காஜாமலை பஸ் நிறுத்தம் அருகில்இன்று மாலை5 மணி அளவில் திடீர் என பூகம்பம் வந்தது போல் பயங்கர சத்தத்துடன் சாலை சுமார் 10 அடி நீள அகலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அப்போது பாதாள சாக்கடை மெயின்குழாய் செல்லும் திறப்பானில் இருந்து சாக்கடை நீர் குபு குபு என மேல்நோக்கி எழுந்து சாலை முழுவதும் பரவியது.
இந்த சம்பவத்தால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதி முழுவதும் பேரிகாட் வைத்து தடுத்தனர். இருசக்கர வாகனங்கள் தவிர கார் உள்பட அனைத்து வாகனங்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
பூகம்பம் வந்தது போல் சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் அந்த பகுதி முழுவதும் பரவியது. அப்பகுதி மக்கள் அங்கு வேடிக்கை பார்ப்பதற்காக கூடினர். பாதாள சாக்கடை கழிவுநீர் பண்ணைக்கு செல்லும் மெயின் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தண்ணீர் இப்படி வெளியேறியது தெரியவந்து உள்ளது. அந்த குழாய் உடைப்பினை சரி செய்யும் பணிகள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu