திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையின் பாலம் பக்கவாட்டு சுவர் இடிந்தது

பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து கிடக்கும் காட்சி.
திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீர் என இடிந்து விழுந்தது.
தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் தஞ்சை திருச்சி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது ஆள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் தஞ்சை திருச்சி சாலையில் குவிந்தனர் .உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக கூறி தஞ்சை திருச்சி சாலையில் திரண்ட விவசாய சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்ததால் திருச்சி கந்தர்வகோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கிப்பட்டி பிரிவு சாலை வழியாக சென்றன. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் தரமற்ற பலத்தை கட்டி சரிவர பராமரிக்காதப்படாததே பாலத்தின் சுவர் இடிந்து விழுந்ததற்கு காரணம் எனக் கூறி கோஷமிட்டனர்.
மேலும் பாலத்தை புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் செங்கிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் கணேஷ் குமார் தலைமையில் என்ஜினீயர்கள் குழுவினர் மற்றும் திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர்கள் பாஸ்கரன் முத்துக்குமரன் ஆகியோரும் வந்து இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu