திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
X
திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் சட்ட ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை செய்யும் குற்றவாளிகள் மீது மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக காவல் உதவி ஆணையர்கள் சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 11 -12 -2023 ஆம் தேதி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆஃபீஸர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியும், ஆம்புலன்ஸ் அதிபருமான பிரபு என்பவர் அடையாளம் தெரிந்த நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரியமங்கலம் அம்மன் குளத்தைச் சேர்ந்த ரவுடி ரியாஸ் ராஜ் (வயது 24 )மற்றும் 4 நபர்கள் சேர்ந்து ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் ரியாஸ் ராஜ் மற்றும் நான்கு நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் விசாரணையில் ரியாஸ் ராஜ் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு உள்பட இரண்டு வழக்குகளும், பொன்மலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் பெண்ணை அத்துமீறி வீடு புகுந்து தாக்கியதாக ஒரு வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ரியாஸ் ராஜ் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ரியாஸ்ராஜுக்கு மாநகர காவல் ஆணையரின் உத்தரவு சார்வு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன், லட்சுமணன், ராஜேஷ் பைலட் ஆகியோர் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!