திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பக்கம் உள்ள நத்தமாடிபட்டியை சேர்ந்தவர் ஜோசப். விவசாயியான இவரின் நிலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க ஜோசப் வந்தார். அப்போது திடீர் என்று, தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோஷமிட்டபடி உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்ட அங்கே பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரின் உடலில் தண்ணீரை ஊற்றிய போலீசார் விசாரணைக்காக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கலெக்டர் அலுவலக பிரதான வாயிலில், போலீசார் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரிசை ஒழுங்கு படுத்துதல், கூட்டம் அதிக நேரம் நிற்பாமல் கலைந்து செல்ல அறிவுறுத்தல் என்று பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். இத்தனையையும் கடந்து ஒருவர் மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து தீக்குளிக்க முயற்சி செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஜோசப்பிற்கு போலீசார் உரிய அறிவுரை கூறியும் எச்சரிக்கை செய்தும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்து உள்ளனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!