திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X
திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் பழம் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த, பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரையும் வழங்கி உள்ளார்.

கடந்த 11.10.22-ம்தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த பழ வியாபாரி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரவுடி பாபு (எ) குளத்துக்கரை பாபு (வயது 30)என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி பாபு (எ) குளத்துக்கரை பாபு மீது 14 திருட்டு வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்ததாக 5 வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 25 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே பாபு (எ) குளத்துக்கரை பாபு என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டு மற்றும் கத்தியை காட்டி பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவார் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் குற்றப்பிhpவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி குளத்துக்கரை பாபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள பாபு (எ) குளத்துக்கரை பாபுவிடம் இன்று குண்டர் தடுப்பு சட்டம் ஆணை சார்வு செய்யப்பட்டது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் எந்தவித விசாரணையும் இன்றி ஒரு வருட காலம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil