திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்

திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
X

திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்.

திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட் தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட் குறித்து முதல் அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஒரு வார காலமாக திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அருகில் உள்ள இரண்டு கட்டண கழிவறைகள் பூட்டி கிடக்கிறது. இதனால் மலம் ஜலம் கழிக்க வியாபாரிகளும் பொது மக்களும் பெரிதும் சிரமப்படுகிறார்கள்

இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களை கேட்டால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். எப்போ சரி செய்வீர்கள் என்று கேட்டால் செய்யும் போது செய்வோம் என்று திமிராய் பதில் கூறுகிறார்கள்

ஐயா காந்தி மார்க்கெட்டில் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும் பொதுமக்களும் வந்து போகும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது கழிவறை. மேற்படி அந்த இரண்டு கழிவறைகளை பெரிதும் உபயோகப்படுத்துகிறார்கள்.

காந்தி மார்க்கெட்டில் உள்ளேயும் வெளியேயும் உள்ள, நான்கு கழிவறைகளை குத்தகைக்கு ஏலம் விட்டு தனியார் பராமரித்து வந்தார்கள் அவர்கள் பராமரிக்கும் போது கூடுதாக வசூல் செய்ததாலும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தார்கள்.

ஆனால் தற்போது மாநகராட்சியே நேரடி நிர்வாக வசூல் செய்து வருகிறது பராமரிப்பு சரியில்லாததால் அடைப்பு ஏற்பட்டு பூட்டி கிடக்கிறது என்பது தெரிகிறது. இதுதான் மாநகராட்சி நிர்வாகம் பார்க்கும் லட்சணமா?

மேயர் கவுன்சிலர்கள் இல்லாத கால கட்டத்தில் கூட மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. சென்ற ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது .

காந்தி மார்க்கெட் மணிக்கூண்டில் மீன் மார்க்கெட்டை ஒட்டியே கழிவறைகள் இருப்பதால் . மனிதக் கழிவுகள் இறைச்சி கழிவுகள் என சிதறியும் மனித கழிவுகள். கழிவு நீரோடு சாலையில் மிதந்து காட்சியளிக்கிறது.. அந்தப் பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு சிலர் வாந்தி எடுத்து கடந்து செல்கிறார்கள்..

மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிகிறதா என்பது தெரியவில்லை. அரியமங்கலம் மண்டலம் 2 உதவி ஆணையர் தினசரி ரோந்து பணிக்கு வருகிறார். மேற்படி பிரச்சனை பல மாதங்களாக நடந்து வருகிறது அதிகாரிகள் உடனே கவனத்தில் கொண்டு உடனே கழிவறைகளை திறக்க வேண்டும் மேலும் காந்தி மார்க்கெட்டில் உள்ளே உள்ள இரண்டு கழிவறைகள் உள்பட மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இல்லையென்றால் நான்கு கழிவுகளை பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .

மேலும் காந்தி மார்க்கெட் அருகே தர்பார் மேடு பகுதியில் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீன் மார்க்கெட் , ஆடுகோழி இறைச்சி மார்க்கெட் ,. கருவாட்டுக் கடைகள்,முட்டை கடைகள், கேனா கடைகள் என. நவீனமயமாக கட்டப்பட்டு இரண்டு முறை , திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள் அமைச்சர்கள் திறந்து வைத்தும் பயன்பாட்டிற்கு வராதது ஏன்?,

எனவே உடனே புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை அங்குள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று உடனே திறக்கப்பட வேண்டும் .மணிக் கூண்டு, டைமண்ட் ஜூப்ளியில் செயல்படும் மீன் மார்க்கெட் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!