/* */

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் துவக்கம்

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் துவங்கப்பட்டது.

HIGHLIGHTS

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் துவக்கம்
X

சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் உணவு பாதுகாப்பு துறை மூலம் திருச்சி  மாவட்ட கலெக்டரால் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் 'ஈட் ரைட் திருச்சிராப்பள்ளி ஃபேஸ்புக் குரூப்' என்கிற முகநூல் குழுமம் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் கலந்து கொண்டு புதிய முகநூல் குழுமத்தின் லோகோவை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

இந்த முகநூல் பக்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அன்றாட செயல்பாடுகள் பதிவிடப்பட்டிருக்கும். மேலும் பொதுமக்கள், மாணவர்கள் சரியான ஆரோக்கியமான பாதுகாப்பான உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள் இதனை பின்பற்றுபவர்களாகவும், விரும்புவர்களாகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஹோட்டல் மற்றும் இனிப்பாகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வடிவேல், வசந்தன்,ரங்கநாதன், அன்பு செல்வன், இப்ராஹிம், பாண்டியன், ஸ்டாலின் ,செல்வராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Updated On: 5 July 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்