திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மாற்றுத்திறனாளி கைது
பைல் படம்.
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் ஏட்டு பரமசிவம் ஆகியோர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனைகள் ஏதும் நடைபெறுகிறதா என நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இ.பி.ரோடு, முருகன் தியேட்டர் முன்பு இரண்டு காலும் ஊனமுற்ற மாற்று திறனாளியான ஒருவர் மூன்று சாக்கர வாகனத்தின் டேங்க் கவரில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசாரை கண்டதும் அந்த மூன்று சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது, அவர் பெயர் திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுக்கா கள்ளிக்குடி அருகே உள்ள மலைப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் கார்த்திக் (வயது 38). என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை சோதனை செய்து பார்த்தபோது அந்த வாகனத்தின் டேங்க் கவரில் கஞ்சா வைத்திருந்ததை கண்டனர்.
பின்னர் அவர்மீது வழக்கு பதிவு கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 1 கிலோ 250 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து கார்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu