அ.தி.மு.க. வீழ்ச்சிக்கு காரணம்... திருச்சியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீப காலமாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது . இது தான் சனாதன தர்மம் சனாதனத்தை உடைத்து சமத்துவத்தை கொண்டு வந்தது இந்து சமய அறநிலையதுறை.நேற்று முன் தினம் லக்னோவில் அமித்ஷா பேசி உள்ளார் - சமாஜ்வாதி கட்சி ஜாதியை பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
நாங்களும் ஜாதியை பார்க்க கூடாது என்று தான் கூறுகிறோம் - பா.ஜ.க சமாஜ்வாதியை குறை கூற என்ன தகுதி இருக்கிறது ?ஜனாதிபதி மட்டும் வலிமையானவராக இருந்தால் இந்த பாரதிய ஜனதா கட்சியை கூட கலைக்கலாம்.
அ.தி.மு.க. போராட்டம் நடத்துகிறார்கள் - வெளிப்படை தன்மை இல்லை என கூறுகிறார்கள் .ஆனால் அது போன்ற நிலை இல்லை - பெட்ரோலுக்கு 3 ரூபாயை இந்த மாநில அரசு குறைத்துள்ளது.
35 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள் - இதற்குக் காரணம் மத்திய மோடி அரசு,எனவே அதிமுக நியாயமாக அவர்களை எதிர்த்துப் போராடாமல்,சிறப்பாக செயல்பட்டு வரும் தி.மு.க.வை எதிர்த்து போராடுகிறார்கள். அ.தி.மு.க. வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் கண்டிப்பாக பா.ஜ.கவுடன் வைத்திருந்த நெருக்கம் தான்.
விவசாய விலை பொருள் ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். இதனை சட்ட மன்றத்தில் கொண்டு வர வேண்டும். தமிழக விலை பொருட்கள் வேறு - வட இந்திய பகுதியில் உள்ள நிலை வேறு. விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு1000 ரூபாயை ஊக்கதொகையாக வழங்க வேண்டும்.பெட்டிக் கடையில் உள்ளவர்களுக்கு உள்ள வருமானம் கண்டிப்பாக விவசாயிகளுக்கு இல்லை நீராரும் கடலுடத்த பாடலை மாநில அரசின் பாடலாக அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கூடங்கள் இவ்வளவு நாளாக ஏன் கண்டுகொள்ளப்பாடாமல் இருந்தது ? மாணவர்கள இறப்பிற்கு பின்னர் தான் கண்டு கொள்ளப்படுகிறது என்ற கேள்விக்கு
இது மிக பெரிய பிரச்சனை - அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் வாதிகள் வீடு 100 வருடம் இருக்கிறது,ஆனால் பள்ளி கூடங்கள் 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேட்ட போது அனைவருமே சிரித்தனர் - அது தான் அதற்கு பதிலும் போல. இந்த பிரச்சினைக்கு ஒரு வரியில் பதில் கூடாது என்றார்.
2024-ல் திமுக அரசு கலைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு?எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்கிறார் - அவர் ஒன்றும் கடவுள் இல்லை,அப்படி எல்லாம் எளிதாக எதையும் செய்ய முடியாது என்றார்.
மருத்துவ கல்லூரி திறப்பிற்கு பிரதமர் மோடி அவர்களை திமுக அரசு அழைத்துள்ளது என்ற கேள்விக்கு ?
மாநில அரசு இப்போது Go back மோடி என்று சொல்ல முடியாது - இன்றும் மோடி அரசுக்கு எதிரான அணியில் தான் தி.மு.க.வினர் நாடாளுமன்றத்தில் உள்ளனர் - சமரசம் இல்லாமல் தான் இருக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu