அ.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி வீடு வீடாக வாக்குசேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி வீடு வீடாக வாக்குசேகரிப்பு
X

வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி.

திருச்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார். வேட்பாளர் கிருஷ்ண வேணி இன்று மலைக்கோட்டை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.


அப்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களை எடுத்துக்கூறி உள்ளாட்சி நிர்வாகத்தில் நல்லாட்சி மலர எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசீர்வாதத்துடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் மற்றும் பெண்களிடம் தனது வாக்குறுதிகள் அடங்கிய துண்டு நோட்டீசுளை வினியோகம் செய்தும் ஆதரவு திரட்டினார்.

Tags

Next Story
ai future project