திருச்சியில் நாளை உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருச்சியில் நாளை உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
X
திருச்சியில் நாளை உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருச்சியில் நாளை உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

12 வகுப்பு முடித்து கல்லூரி பயிலவுள்ள மாணவ,மாணவிகளுக்கு உயர் கல்வி பயில வழிகாட்டுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரிக் கனவு” என்ற நிகழ்வு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாளை (08.05.2024) புதன்கிழமை அன்று கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கல்லூரிக்கனவு நிகழ்வு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பாக நிடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கல்வி இலாகா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி கனவு நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர்.மேலும் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோ காட்சிகள், உயர்கல்வியில் சாதித்த மாணவ மாணவிகளின் அனுபவ பகிர்வு, உயர்கல்வி பயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தகவல்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்து காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

எனவே, 12ஆம் வகுப்பு முடித்த மாணவஃமாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, உயர்கல்வி குறித்து தகுந்த வழிகாட்டுதல்களை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது