95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண ஏற்பாடு

95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண ஏற்பாடு
X

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டார்.

95 மேஜைகளில் 288 பணியாளர்கள் மூலம் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பதிவான வாக்கு எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 14 மேதைகளில் 25 சுற்றுகளாக எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க, ம,தி,மு,க ,அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 பேர் போட்டியிட்டனர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆண்கள் 7,57,130 பேரும் பெண்கள் 7 .லட்சத்து 96 ஆயிரத்து 616 பேரும் மூன்றாம் பாலினத்தினர் 239 பேரும் என்று மொத்தம் 15 லட்சத்து 53 ஆயிரத்து 985 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக 699 இடங்களில் 1265 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆண்கள் 5,12,264 பேரும் பெண்கள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 844 பேரும் மூன்றாம் பாலினத்தினர்கள் 102 பேரும் இன மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 210 பேர் வாக்களித்தனர் மேலும் 8,631 பேர் தபால் மூலம் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

திருச்சி தொகுதியின் வாக்குப்பதிவு சதவீதம் 67.52 ஆகும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன அத்துடன் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

6சட்டமன்ற தொகுதிகளுக்கு என்று தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வருகிற 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக ஒரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதமும் தபால் வாக்குகள் எண்ண தனியே 11 மேதைகளும் என்று மொத்தம் 95 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை வேட்பாளர்கள் முகவர்கள் பார்வையிடுவதற்காகவும் கண்காணிக்கவும் தனி தடுப்புகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுற்று வாரியாக முடிவுகள் எழுதி அறிவிக்க அறிவிப்பு பலகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும் மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவரும் ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் 252 பேரும் 36 மாற்றுப் பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 288 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

வருகிற நான்காம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முதலில் தபால் வாக்குகளும், காலை எட்டு முப்பது மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. இதில் தபால் வாக்குகள் இரண்டு சுற்றுகளாகவும் கந்தர்வகோட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாகவும் புதுக்கோட்டை மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் தலா 19 சுற்றுகள்ாகவும் எண்ணப்பட உள்ளன. இதே போல திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும், திருவெறும்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 22 சுற்றுக்களாகவும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன

Tags

Next Story