திருச்சி மாவட்டத்தில் பிளஸ்1 பொது தேர்வில் 91.64 மாணவ மாணவிகள் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்1 பொது தேர்வில் 91.64 மாணவ மாணவிகள் தேர்ச்சி
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்1 பொது தேர்வில் 91.64 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு பொது தேர்வினை 2021 -2022 ஆம் கல்வி ஆண்டில் 260 பள்ளிகளை சேர்ந்த 15, 760 மாணவர்களும், 16, 990 மாணவிகளும் ஆக மொத்தம் 32, 750 மாணவ மாணவியர்கள் எழுதினர். 13, 614 மாணவர்களும், 16,398 மாணவிகளும் ஆக மொத்தம் 30,012 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.52 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.38 சதவீதம். ஆக மொத்தம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்

Tags

Next Story