திருச்சி மாநகராட்சி ஓயாமரி எரிவாயு தகன மையம் 9 நாட்கள் தற்காலிக மூடல்

திருச்சி மாநகராட்சி ஓயாமரி எரிவாயு தகன மையம் 9 நாட்கள் தற்காலிக மூடல்
X

திருச்சி மாநகராட்சி ஓயாமரி எரிவாயு தகன மையம். (கோப்பு படம்)

திருச்சி ஓயாமரி எரிவாயு தகன மையம் 9 நாட்கள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஓயாமரி நவீன எரிவாயு தகன மையம் 30.08.2023 முதல் 07.09.2023 வரை பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளதால் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திருச்சி நகரில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் ஓயாமரி எரிவாயு தகன மையம் மற்றும் அதன் அருகில் விறகு மூலம் எரிக்கும் மயானம் மற்றும் திருச்சி உறையூர் கோணக்கரை எரிவாயு தகனமையம், கருமண்டபம் எரிவாயு தகன மையம், அரியமங்கலம் இடுகாடு, சங்கிலியாண்டபுரம் பகுதியில் மணல்வாரித்துறை இடுகாடு மற்றும் எரியூட்டும் மயானங்கள் உள்ளன.

இதில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஓயாமரி எரிவாயு தகன மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர் செய்திட 30.08.2023 முதல் 07.09.2023வரை பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட மையத்தில் சடலங்கள் தகனம் செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தினை தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மையத்தினை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....