திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வு எழுதும் 85,747 தேர்வர்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி- 4 (குரூப் - 4)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வரும் 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 301 தேர்வு மையங்களில் 85,747 தேர்வர்கள் இத்தேர்னை எழுத உள்ளனர். இத்தேர;வு பணிகளுக்கென 301 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 100 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களை திடீர்ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 11 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு மையத்தினை கண்காணித்திட 301 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்லிடைப்பேசி, புளுடுத், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என்றும், காலை 09.00 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்களை எந்த காரணத்தினை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சி;த்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu