திருச்சியில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: 2 பேருக்கு போலீசார் வலை

திருச்சியில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: 2 பேருக்கு போலீசார் வலை
X

பைல் படம்.

திருச்சியில் பெண்ணிடம் 8 பவுன் தாலிசங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி உறையூர் தோப்புகுளம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 45). இவர் நேற்று மாலை உறையூர் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றார்.

வீடு அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், அதில் ஒரு வாலிபரை பிடித்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் அவர்கள் கிருஷ்ணவேணியை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!