சென்னையில் 8 அமைச்சர்கள் பங்கேற்கும் ஆசிரியர் முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா

சென்னையில் 21ம்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும்விழாவில் 8 அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக மாநில தலைவர் கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் இன்று தா.பேட்டை ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என்.எம்.எம்.எஸ்.தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவில் தியாகராஜன் பேசுகையில்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், பதவி உயர்விற்கு டெட் தேவை என்ற நீதி மன்றத் தீர்ப்பு எதிர்த்து மேல்முறையீடு செய்து இரத்து செய்ய வேண்டும், நீதி மன்ற வழக்குகளில் விரைந்து தீர்வு கண்டு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திட வேண்டும். மேலும் 21.5.2023 அன்று சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடைபெற உள்ள ஐம்பெரும் விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதால் சங்க பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். அதன் மூலமாக ஆசிரியர்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற 6 ஆசிரியர்களுக்கும், இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற 3 ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து சீல்டு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட செயலாளர் உதுமான் அலி, மாவட்ட பொருளாளர் திருமாவளவன், மகளிரணி தலைவி ஜெயலெட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் இளம்பருதி, லால்குடி கல்வி மாவட்டத் தலைவர் பூபாலன் உள்ளிட்ட மாவட்ட வட்டார ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் 150க்கும் அதிகமான ஆசிரியர்கள் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu