திருச்சியில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா மாரத்தான் ஓட்டம்

திருச்சியில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா மாரத்தான் ஓட்டம்
X

திருச்சியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கலெக்டர் சிவராசு பங்கேற்றார்.

திருச்சியில் நடந்த 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா மாரத்தான் ஓட்டத்தில் கலெக்டர் சிவராசு பங்கேற்றார்.

நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு தூண் அருகில் இருந்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.

திருச்சியில் உள்ள பல கல்லூரிகளின் மாணவ மாணவிகள் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் சிவராசு அவரும் மாரத்தானில் கலந்து கொண்டு ஓடினார்.

அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் ஷேக்முஜிப், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் ஓட்டம் தொடங்குவதற்கு முன்பாக மாவட்ட கலெக்டர் சிவராசு உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தி, காமராஜர் மற்றும் ராஜாஜி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!