திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் தேசிய கொடி  ஏற்றினார் கலெக்டர் சிவராசு.

73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதனாத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு தேசிய கொடியை ஏற்றினார்.

இந்தியாவின் 73 - வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நடந்த குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து வண்ண பலூன்களை பறக்க விட்டார். அதன் பின் நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட கலெக்டர் சிவராசு ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 130 காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 489 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து எப்போதும் நடைபெறுவது போல இல்லாமல், இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

Tags

Next Story
ai marketing future