கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
X

திருச்சி நீதிமன்றம் (கோப்பு படம்).

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி சுப்ரமணியபுரம் ஔவையார் தெருவை சேர்ந்தவர் கந்தவேல். இவரது மனைவி வினோதா. கந்தவேல் டூவீலர் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். தொழில் ரீதியாக இவருக்கு திருச்சி திருவானைக்காவல் நெல்சன்ரோட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 47 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் கடந்த 10 -8 -2021 அன்று இவர்கள் இருவரும் பணம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது.இதில் சுரேஷ் கந்தவேலின் கழுத்தில் கத்தியால் குத்தினார். மேலும் அதனை தடுக்க வந்த வினோதாவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இவர்களது சண்டையை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை விலக்கிவிட்டு படுகாயத்துடன் இருந்த கந்தவேலையும் வினோதாவையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கொலை செய்யும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டதாக சுரேஷ் மீது திருச்சி கே கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு 7 வருடம் கடங்காவல் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்த்ரா தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story