டிரைவரை தாக்கி விட்டு லாரியை கடத்தியவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை

டிரைவரை தாக்கி விட்டு லாரியை கடத்தியவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை
X

திருச்சி நீதிமன்றம் (பைல் படம்).

திருச்சி அருகே டிரைவரை தாக்கி விட்டு லாரியை கடத்தியவருக்கு 7 வருடம் சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருச்சி அருகே டிரைவரை தாக்கி விட்டு லாரியை கடத்தியவருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை விதைத்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னையை சேர்ந்தவர் மணி (வயது 57). இவர் தனக்கு சொந்தமான லாரியில் பாமாயில் லோடு ஏற்றிக்கொண்டு கடந்த 31 -10- 2017 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் அந்த பாமாயில் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு பின்னர் திண்டுக்கல் சென்று அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சோப்பு பவுடர் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டார்.

3-11- 2017 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் திருச்சி திண்டுக்கல் மெயின் ரோட்டில் வண்ணாங்கோவில் என்ற இடம் அருகே லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு இரவு கடையில் டிபன் சாப்பிட சென்றார். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டியை சேர்ந்த சந்தோசம் (வயது 44 )என்பவர் அங்கு வந்து லாரியை ஸ்டார்ட் செய்தார்.

இதை கவனித்த மணி ஓடி வந்து அவரை கீழே இறக்க முயன்றார். அப்போது சந்தோஷம் அவரை கத்தியால் குத்துவதாக மிரட்டி கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்தி சென்று விட்டார். இது பற்றி மணி ராம்ஜி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ராம்ஜிநகர் போலீசார் இது குறித்து ஒரு வழக்கு பதிவு செய்து லாரியை கடத்திச் சென்ற சந்தோசத்தை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சந்தோசம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஏழு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி என். எஸ். மீனா சந்திரா தீர்ப்பளித்தார். அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
ai solutions for small business