திருச்சி மாநகராட்சி: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

திருச்சி மாநகராட்சி: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
X

வீல் சேரில் ஜனநாயக கடமையாற்ற வந்த முதியவர் 

திருச்சி மாநகராட்சியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதைத் தொடர்ந்து 1 மணி நிலவரப்படி 42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதில் திருச்சி மாநகராட்சியில் மட்டும் 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி பகுதிகளில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சி பகுதிகளில் 56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 676 வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஒரு சில இடங்களில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சியினரிடையே ஏற்பட்டது. மற்றபடி திருச்சி மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Tags

Next Story