திருச்சி மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகளின் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு, மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்கு, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போலீஸ் நிலையத்துக்கு, அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் அரியலூருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "சமயபுரம் தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்படை போலீசார் சோதனை நடத்தி விபசார புரோக்கர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தக்க நடவடிக்கை எடுக்காததால், அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், புகார்களை சரிவர விசாரிக்காத ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவரும் பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்ற மூன்று இன்ஸ்பெக்டர்களின் இடமாற்றம் வழக்கமான நிர்வாக நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் திருச்சி மத்திய மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu