திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா  தடுப்பூசி
X

திருச்சி பெரிய மிளகுபாறையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

தமிழகமெங்கும் கொரோனோ நோயை தடுக்கும் பொருட்டு 15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முகாம்கள் மூலமாகவும், 12-14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் மூலமாகவும் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் 35 சுற்றுகளாக தமிழகமெங்கும் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து நேற்று 11.09.2022 தமிழகமெங்கும் 36ஆம் சுற்று சிறப்பு மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திலும் 36ஆம் சுற்று சிறப்பு மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்களானது சுகாதார துறையினருடன் இணைந்து வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு துறை ,மகளிர் திட்ட துறை, காவல் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் பிற துறையினரின் பங்களிப்போடு வெற்றிகரமாக நடைபெற்றது. சிறப்பு மெகா கொரோனோ தடுப்பூசி முகாமின் பொருட்டு ஊரக பகுதிகளில் சுமார்1220 முகாம்களும் மற்றும் மாநகரப் பகுதிகளில் 600 முகாம்களுமாக மொத்தம் 1820 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, பிற அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

நேற்ற காலை 7 மணி முதல் நடைபெற்ற இம்முகாம்களில் மாவட்டம் முழுவதும் 49576 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக்கொண்ட 1965 பயனாளிகளும், இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட 10167 பயனாளிகளும், முன் எச்சரிக்கை தவணை செலுத்திக்கொண்ட 31256 பயனாளிகளும், கோவாக்ஸின் முதல் தவணை செலுத்திக்கொண்ட 199 பயனாளிகளும், இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட 2064 பயனாளிகளும், முன் எச்சரிக்கை தவணை செலுத்திக்கொண்ட 3563 பயனாளிகளும் மற்றும் கோரிபிவேக்ஸ் செலுத்திக்கொண்ட 362 பயனாளிகளும் அடங்குவர்மேலும் பொதுமக்களுக்கு கொரோனா நோயின் தொற்று பற்றிய விழிப்புணர்வும், கொரோனா தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதாரத் துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.

திருச்சி பெரிய மிளகுபாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story