திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,567 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 61 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,105 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,464 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 93 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 80 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story