திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள்

திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 459 மனுக்கள் பெறப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 459 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அம்பிகாபதி(ச.பா.தி) மற்றும் அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!