திருச்சியில் மனைகளை வரன்முறைப்படுத்தக்கோரி வந்த 4,202 விண்ணப்ப மனுக்கள்
திருச்சி உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் மனைகளை வரன்முறை படுத்த கோரி 4,202 விண்ணப்ப மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்காக தமிழக அரசின் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான உள்ளூர் திட்ட குழுமங்கள் மற்றும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களில் வரன்முறை படுத்த கோரி பொதுமக்கள் தங்களது விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாவட்ட நகர் ஊரமைப்பு குழு அலுவலகத்திற்கு கடந்த 9-9- 2023 முதல் இதுவரை 4202 விண்ணப்ப மனுக்கள் வந்துள்ளது. இவற்றில் 195 விண்ணப்பங்கள் புதிய மனைப்பிரிவு அங்கீகாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். மற்றவை தனிப்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் என உள்ளூர் திட்ட குழும அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்படாத லேஅவுட்களில் காலிமனை வாங்கியவர்கள் அதனை விற்பதற்கோ, வாங்குவதற்கோ அல்லது அந்த மனையில் கட்டிடம் கட்டுவதற்கோ மனை அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழ் இருந்தால் தான் மற்ற நடவடிக்கைகளை தொடர முடியும் என்பதால் தற்போது மக்களிடம் மனை அங்கீகாரம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக தான் திருச்சி மாவட்டத்தில் தற்போது மனைப்பிரிவு அங்கீகாரம் தொடர்பான விண்ணப்பங்கள் தாக்கல் செய்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu