திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது  போலீசார் வழக்கு
X

திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் (பைல் படம்)

திருச்சியில் ஆன்லைனில் தேர்வு எழுத வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆன்-லைன் மூலம் பருவ தேர்வுகளை நடத்த வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்து மாணவர் இயக்க அமைப்பு மாநில தலைவர் முனீஸ் (வயது 26), 10 மாணவிகள் உள்பட 400 மாணவர்கள் மீது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த மாணவர்கள் திரள இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!