திருச்சியில் பணியின்போது இறந்த 4 போலீசார் குடும்பத்திற்கு நிவாரண நிதி

திருச்சியில் பணியின்போது இறந்த 4 போலீசார் குடும்பத்திற்கு நிவாரண நிதி
X

பணியின்போது இறந்த போலீசாரின் குடும்பத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

திருச்சியில் பணியின்போது இறந்த 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரணநிதியை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரணநிதியில் இருந்து மாநகர போலீஸ் கமிஷனர் தலா ரூ.3,00,000/- வீதம் வழங்கினார்.

இதில் திருச்சி மாநகரத்தில், கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன், கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், எடமலைப்பட்டிப்புதூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் முருகையன் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சைபிள்ளை ஆகியோர் கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் இறந்து விட்டனர்.

அவர்களின் குடும்பத்தின் உரிய வாரிசுதாரர்களுக்கு,தமிழக முதலமைச்சரின் நிவாரணநிதியிலிருந்து தலா ரூ.3,00,000/- வீதம் மொத்தம் ரூ.12,00,000/- வழங்க, கிடைக்கப்பெற்ற ஆணையின்படி, இறந்த இந்த 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு, திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் தலா ரூ.3,00,000/-ஐ திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வழங்கி அந்த 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்