திருச்சியில் ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

திருச்சியில் ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
X
திருச்சியில் நேற்று ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்தது. தற்போது தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தீரன்நகர் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 23 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர்.

திருச்சியில் கொரோனா தொற்றுக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. தற்போது வரை 1,280 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்து 215 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,104 ஆக உள்ளது.

Tags

Next Story
ai as the future