திருச்சியில் பெண் கையை பிடித்து இழுத்தவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை

திருச்சியில் பெண் கையை பிடித்து இழுத்தவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை
X

திருச்சி நீதிமன்றம் பைல் படம்.

திருச்சியில் பெண் கையை பிடித்து இழுத்தவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 49) இவர் கடந்த 16- 11- 2015 ஆம் தேதி தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கீதபுரத்தில் நடந்து சென்ற ஒரு பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியும், கையைப் பிடித்து இழுத்தும் துன்புறுத்தியதாக தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணையை முடித்த நீதிபதி மணி வாசகன் குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!