3 நிமிட குறும்பட போட்டிக்கு தேர்வான குறும்பட குழுவினருக்கு பாராட்டு

3 நிமிட குறும்பட போட்டிக்கு தேர்வான குறும்பட குழுவினருக்கு பாராட்டு
X
3 நிமிட குறும்பட போட்டிக்கு தேர்வான குறும்பட குழுவினருக்கு நகைச்சுவை நடிகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் 30 க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவரும், அதில் பல சமூக விழிப்புணர்வு படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை பெற்றவருமான இயக்குனர் குமார் தங்கவேல் இயக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட குறும்படம் பிஸ்கோத் vs அல்வா. இந்த விழிப்புணர்வு குறும்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது. 3 நிமிட குறும்பட போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள இப்படம் 3 நிமிடத்தில் விழிப்புணர்வு செய்தி சொல்லும் வகையில் குறும்படத்தை எடிட் செய்து போட்டிக்கு அனுப்பியுள்ளனர் பட குழுவினர்.

இப்படத்தை பார்த்த பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு பிஸ்கோத் vs அல்வா என்ற 3 நிமிட குறும்படம் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாமல் பெரிய படத்திற்கு இணையாக அமைந்துள்ளது என்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

குமார் தங்கவேல் கொரோனா காலகட்டத்தில் பல விழிப்புணர்வு படங்களை எடுத்து காவல்துறையின் நன்மதிப்பை பெற்று திரைத்துறையில் சாதித்துள்ளார். இந்த பிஸ்கோத் vs அல்வா படம் பல விருதுகளை பெறவும் இப்படி திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பும் அங்கீகாராமும் கொடுத்து ஊக்குவித்தால் மேலும் பல சாதனைகளை படைப்பார்கள் என்று கூறினார். இப்படத்தில் சமூக ஆர்வலரும் நடிகருமான திருச்சி ஆர்.ஏ.தாமஸ் 2 விதமான கெட்டபுகளில் தோன்றி நடித்துள்ளார்

இந்த குறும்படத்திற்கு கதைக்களம் முத்துரத்தினம், ஒளிப்பதிவு யாசின், இசை கிருஷ்ணகுமார், திரைக்கதை- வசனம்-எடிட்டிங்- டப்பிங்- இயக்கம் குமார் தங்கவேல். நடிகர் நடிகைகள் யாசின், அசோக்குமார், திருச்சி ஆன்டணி தாமஸ்,செந்தில் குமரன்,யோகராஜ், அனு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். போட்டிகள் முடிவடைந்த பிறகு முழு படம் வெளியிடப்படும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!