திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: மூவர் கைது
திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த தீபாவளி தினத்தன்று மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது சுமார் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு, ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள்3 பேரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மலேசியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
இந்த நிலையில் அவர்களை சோதனை செய்தபோது அந்த 3 பயணிகளும் தங்களது உடலில் மறைத்து, பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. ரூ.1.85 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல்தங்கத்தை அவர்களிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த 3 பயணிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu