திருச்சி விமான நிலையத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்
திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்).
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்/
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்படுவதில் திருச்சி சுங்கத்துறையில் பணியாற்றி வரும் டிரைவர் ஒருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் திருச்சி விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றி வந்த துணை கமிஷனர்கள் இளமதி மற்றும் ராம்குமார் உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்த சிவகுமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக உதவி கமிஷனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள கௌரி ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரத்தில் நடைபெறும் தங்க கடதலை தடுக்கும் வகையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu