திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது
X

முயல் வேட்டைக்கு முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட வனத்துறையினர் பெரிய காட்டு குளம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முயல் வேட்டையாட சென்ற 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பெரிய காட்டு குளத்தை சேர்ந்த சிவராஜ், கட்டயம் பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்த், கள்ளவாய்ப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்த 3 பேர் மீதும் வனக்குற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஹெட் டார்ச் லைட், எலக்ட்ரானிக் கருவி ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்