காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 3 பேர் கைது

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 3 பேர் கைது
X

திருச்சியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் கையில் தாலியுடன் வந்தனர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலியுடன் போராட்டம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் முன்பு இன்று 14-ந்தேதி காலை அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை சார்பாக காதலர் தினம் என்ற பெயரில் காதலர் தினத்தன்று மலைக்கோட்டை கோவிலுக்கு வந்து கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதை கண்டித்தும் கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு மஞ்சள் கயிறுடன் கூடிய தாலி வழங்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு வீர விவேகானந்தர் பேரவை நிறுவனத்தலைவர் கோட்சே ஆனந்த் தலைமை தாங்கினார்.இதில், அகில பாரத அனுமன் சேனா மாநில இளைஞரணி செயலாளர் கங்காதரன்,வீர விவேகானந்தர் பேரவை மாவட்ட தலைவர் சுப்பிரமணி என்ற மகேஷ், பா.ஜ.க. மலைக்கோட்டை பகுதி மண்டல பொதுச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் காதல் என்ற பெயரில் கள்ளத்தனமாக காதல் செய்பவர்களுக்கு மட்டும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். காதலுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் கோவிலில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வருங்காலங்களில் இவை தடை செய்யப்பட வேண்டும் என பேட்டி அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பேரில் மாநகராட்சி தேர்தலில் 35-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் சுப்பிரமணி என்ற மகேஷ் பாதியிலேயே ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி சென்று விட்டார்

மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு 7 மணிவரை மூவரும் விடுவிக்கப்பட வில்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்