திருச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையிலான 2வது குலுக்கல்

திருச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையிலான 2வது குலுக்கல்
X
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அஞ்சல் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
திருச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையிலான 2வது குலுக்கல் இன்று நடைபெற்றது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது குலுக்கல் (இரண்டாவது ரேண்டமிசேஷன்) மாவட்ட பொதுப்பாh;வையாளர் தினேஷ் குமார், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல் - 2024 தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் குலுக்கல் முறை முடிவுற்று அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடா;ந்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பொதுப்பார்வையாளர் தினேஷ் குமார், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் ஆகியோh;களின் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது குலுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 01.04.2024 அன்று நடைபெற்றது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் - 3056 நபர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் - 1 - 3056 நபர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் - 2 - 3056 நபர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் - 3 - 3056 நபர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் - 432 நபர்கள் என ஆக கூடுதல் 12656 அலுவலர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்டுள்ள அலுவலர்களுக்கு எதிர்வரும் 07.04.2024 அன்று ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பயிற்சி மையங்களிலும் 2வது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. மேற்கண்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது குலுக்கல் ஒதுக்கீட்டின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சீனிவாசன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வம் ஆகியோh; உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது