திருச்சியில் 21-வது நாள் விவசாயிகள் உடலில் கட்டு போட்டு போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் கை கால்களில் கட்டுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தர வேண்டும். அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உத்தர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் , செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபகாரமான விலை தருவதாக கூறி ஒரு கிலோ ரூபாய் 18 விற்ற நெல்லுக்கு ரூபாய் 36 சேர்த்து ரூபாய் 54 தருகிறேன் என கூறி விட்டு தராமல் ஏமாற்றுவதாகவும்,
இதனை கண்டித்து 21-வது நாளாக இன்று மத்திய அரசை கண்டித்து தலை கை கால்களில் அடிபட்டு இரத்தம் வருவது போன்று கட்டுப்போட்டு நூதன முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu