திருச்சி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர் திடீர் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி கண்காணிப்பின் கீழ் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்த தனிப்பிரிவில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ஒரு காவலர் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு கவனத்துக்கு கொண்டு செல்வார்கள்.
அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தனிப்பிரிவில் பணியாற்றலாம். சில காவலர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பிரிவில் பணிபுரிந்து வந்தனர்.
இது பற்றி அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் மத்தியமண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர்,தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் தனிப்பிரிவில் பணியாற்றியவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக விடுவித்து அவர்களுக்கு பதில் இளம் காவலர்களை நியமிக்க உத்தரவிட்டார்.
அதன்படி திருச்சி மாவட்ட தனிப்பிரிவில் பணிபுரிந்த 21 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 21 இளம்காவலர்களை நியமித்து போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலையங்களில் 21 பேர் ஒரேசமயத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu